Posts

Showing posts from September, 2017

பெரியார் போராட்டங்கள் கட்சியைக் காக்கவா?

தம்மோடு   இருந்தவர்களைத்   தக்க   வைத்துக்   கொள்வதற்கென   பெரியார்   பல   போராட்டங்களை   நடத்த   வேண்டியிருந்தது    அயோக்கிய   குணாவின்   அடுத்த   குற்றச்சாட்டு   இது .  அதாவது   பெரியார்   செய்த   சாதனைகள் ,  அவரின்   தனித்   தன்மைகள் ,  அவரது   சிறப்புகள் ,  அவரது   நாணயமான ,  நேர்மையான ,  நம்பகமான   போக்கு   என   எல்லாவற்றையும்   எப்படியாவது   கேவலப்படுத்தி ,  அவரை   இழிவுபடுத்த   வேண்டும்   என்ற   ஒரே   இலக்குடன்   இந்த   மனிதர்   எழுதுகோலை   எடுத்துள்ளார்   என்பது   இதிலிருந்து   விளங்குகிறது . மேற்கண்ட   குற்றச்சாட்டை   போல   ஓர்   அற்பத்தனமான   குற்றச்சாட்டை   யாரும்   காட்ட   முடியாது .  அந்த   அளவிற்கு   உண்மை   கலவாத ,  மோசடியான   முழுப்   பொய்யான   குற்றச்சாட்டு ...

ஆரியர் படையெடுப்பு என்பது தவறா?

வடஇந்தியாவில் , விந்திய மலைக்கு மிகவும் அப்பால் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை வைத்து , அந்த வடஇந்திய வரலாற்றைச் சென்ற இரண்டாயிரம் ஆண்டுக் காலத் தமிழக வரலாற்றின்மீது கண்மூடித்தனமாகத் திணிப்பது பெருந்தவறு . இங்குதான் தமிழர்மீது திணிக்கப்பட்ட ஆரிய திராவிடக் கொள்கை முதல் அடியை வாங்குகிறது . தமிழரின் தாயகம் கடைச்சங்கக் காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை எனக் குன்றிவிட்டது . அவ்வாறு தமிழரது தாயகம் சுருங்கியபின் , எந்தவொரு நேரடி ஆரியப் படையெடுப்பாவது தமிழகத்தின்மீது நடந்ததுண்டா ? குறுக்குசால் ஓட்டும் குணாவின் குணக்கேடான உளறல் குற்றச்சாட்டு இது . கடைச் சங்க காலத்தில் தமிழரின் எல்லை வடவேங்கடம் முதல் தென்குமரி வரையென சுருங்கியது என்றால் , அதற்குமுன் தமிழகத்தின் எல்லை எதுவாக இருந்தது ? அது யாரால் சுருங்கியது என்ற உண்மையை அறிவு நாணயத்தோடு அறிவிக்க வேண்டுமல்லவா ? அயோக்கியத்தனமாக அதை அப்படியே மறைத்துவிட்டு , கடைச்சங்கக் காலத்திற்குப் பின் ஆரியர் படையெடுப்பு தமிழர் மீது உண்டா என்று கேள்வி எழுப்புவது , ஆரி...