பெரியார் போராட்டங்கள் கட்சியைக் காக்கவா?
தம்மோடு இருந்தவர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கென பெரியார் பல போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது அயோக்கிய குணாவின் அடுத்த குற்றச்சாட்டு இது . அதாவது பெரியார் செய்த சாதனைகள் , அவரின் தனித் தன்மைகள் , அவரது சிறப்புகள் , அவரது நாணயமான , நேர்மையான , நம்பகமான போக்கு என எல்லாவற்றையும் எப்படியாவது கேவலப்படுத்தி , அவரை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இந்த மனிதர் எழுதுகோலை எடுத்துள்ளார் என்பது இதிலிருந்து விளங்குகிறது . மேற்கண்ட குற்றச்சாட்டை போல ஓர் அற்பத்தனமான குற்றச்சாட்டை யாரும் காட்ட முடியாது . அந்த அளவிற்கு உண்மை கலவாத , மோசடியான முழுப் பொய்யான குற்றச்சாட்டு ...